புனைப்பெயர்(Nickname): குடந்தை(Kudanthai),தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ்(South India Cambridge), கோவில்களின் நகரம்(Temple City).
நகராட்சியாக இருந்த கும்பகோணம், 24.08.2021 அன்று தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் தமிழக முதலமைச்சரால் தமிழ்நாட்டின் 16-வது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
அமைவிடம்(Location):-
கும்பகோணம் (Temple City) என்பது தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் கோயில் நகரமாகும். இது வடக்கே “காவிரி நதி” மற்றும் தெற்கே துணை நதிகளில் ஒன்றான “அரசலாறு நதி” ஆகியவற்றின் கரையில் அமைந்துள்ள ஒரு வளமான பகுதியாகும்.
மகாமகம்:-
கும்பகோணத்தின் மையத்தில் அமைந்துள்ள மகாமகக் குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே “மகாமகம்” என்று கொண்டாப்படுகிறது. மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல நகரங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக தினத்தன்று ஈரேழு பதினான்கு லோகத்தில் வசிப்பவர்களும் இத்திருகுளத்தில் நீராட வருவதாகவும், நவநதிகளும் கன்னிகளாக இங்கு வந்து இத்திருக்குளத்தில் நீராடி தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்கின்றனர் என்றும் ஐதீகம்.